மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்று (27) நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கிடையில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தின் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொள்ளாது கொட்டும் மழையிலும் மக்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களை வடக்கு கிழக்கு எங்கும் நினைவு கூறுவதும் அஞ்சலி செலுத்துவதும் குறிப்பிடத்தக்கதாகும்.