வெளிநாட்டு முகவர் மூலம் சட்டப்படி சுற்றுலா விசாவில் ஜெர்மன் பிரான்ஸ் பெல்ஜியம் போன்ற நாடுகளில் கொண்டு சென்று விடுவோம் என்ற வார்த்தையை நம்பி சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
![]() |
| TubeTamil24x7 |
இதில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞரின் தாய் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்போது, தமது ஊரை சேர்ந்த ஒருவரின் மூலம் அவரை நம்பியே மகனை வெளிநாட்டுக்கு அனுப்பியதாகவும் அவரே தனது மகனுக்கு முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார். ரஷ்ய விமான நிலையத்தில் இறங்கிய தமது பிள்ளைகளை ரஷ்ய இராணுவம் அழைத்துச் சென்றதாகவும் ஒரு வாரம் ஒரு அறையில் தங்க வைத்ததாகவும் பின்னர் ராணுவ பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட முகவரிடம் ஏன் எமது பிள்ளைகளை ராணுவ அழைத்துச் செல்கின்றது என உறவினர்கள் வினவிய போது ஒரு சான்றிதழ் பெற வேண்டி உள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறியதாகவும் அறிய முடிகிறது. அத்துடன் முழு பணத்தையும் கொடுத்தால் தான் அவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என்ற வார்த்தையை நம்பி உறவினர்கள் முழு பணத்தையும் கொடுத்து விட்டதாக அறிய முடிகிறது.
![]() |
| TubeTamil24x7 |
ஆனால் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் ரஷ்யா இராணுவத்தால் போர் பயிற்சிகள் வழங்கப்பட்டு உக்கரைன் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு இளைஞர் தனது தாய்க்கு அனுப்பிய மூன்று குரல் பதிவுகளில் கூறியுள்ளார். அந்த குரல் பதிவுகள் கேட்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அந்த குரல் பதிவில் மேலும் அவர்

