இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை வென்று புதிய வரலாற்று சாதனையை உருவாக்கியுள்ளது.

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை வென்று புதிய வரலாற்று சாதனையை உருவாக்கியுள்ளது. நேரடி வாக்களிப்பில் 141 ஆசனங்கள் மற்றும் தேசிய பட்டியலின் மூலம் 18 ஆசனங்கள் பெற்றுள்ளன. 

முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை தேசிய பட்டியலின் அடிப்படையில் பெற்றிருந்தது. ஆனால், இம்முறை தேசிய மக்கள் சக்தி அந்த எண்ணிக்கையை மீறி 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.





தேர்தல் முடிவுகள்

ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன நாடாளுமன்றத்தில் எத்தனை ஆசனங்களைப் பெற்றுள்ளன என்ற தகவல்களின் முழு விபரங்கள்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்)
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்)
  • சர்வஜன அதிகாரம் (SB) - 178,006 வாக்குகள் (1 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 வாக்குகள் (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் - 945,533 வாக்குகள் (9 ஆசனங்கள்)
Previous Post Next Post