தமிழரசுக் கட்சியின் இடைக்கால தலைவராக சீ.வி.கே சிவஞானம்

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா மற்றும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானம் செயல்படுவார்கள் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இராஜினாமா குறித்து வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.இதற்கான விவாதங்கள் பல இருந்தாலும், 18 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சுமந்திரன் கூறினார்.

மாவை சேனாதிராஜா கட்சியின் நன்மையை கருத்தில் கொண்டு தனது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் இராஜினாமாவை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதற்கு எதிரான கருத்துக்கள் இருந்தாலும் கட்சி இறுதியில் ஒரே மனதுடன் தீர்மானம் எடுத்துள்ளது.

மாவை சேனாதிராஜா கட்சியின் அரசியல் குழுவின் தலைவராக உள்ளார்.
Previous Post Next Post