பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : பலர் உயிரிழப்பு

சனிக்கிழமையன்று பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார், இதன் விளைவாக வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 62 பேர் காயமடைந்தனர், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் ராவல்பிண்டிக்கு செல்லும் ரயிலுக்காக சுமார் 100 பயணிகள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக உயர்மட்ட அரசு அதிகாரி ஹம்சா ஷஃப்கத் தெரிவித்தார். குண்டுவெடிப்புக்கு வழிவகுத்த பாதுகாப்பு மீறல் குறித்து கேட்டதற்கு "இதுபோன்ற தற்கொலைத் தாக்குதல்களை நிறுத்துவது பொதுவாக மிகவும் கடினம்." என ஷஃப்கத் செய்தியாளர்களிடம் கூறினார்.

குவெட்டா ரயில் நிலையத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஷாஹித் நவாஸ் தாக்குதல் நடத்தியவர் பயணியாகக் காட்டிக்கொண்டு நிலையத்தில் இருந்த கூட்டத்தினரிடையே தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக கூறினார்

பிளாட்பாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த கட்டமைப்பையும், தேநீர் கடையின் அழிவையும் தொலைக்காட்சி படங்கள் வெளிப்படுத்தின. அப்பகுதி முழுவதும் தனிநபர் உடைமைகள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் அரசு மற்றும் இராணுவ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையின் பிரதிநிதியான வாசிம் பெய்க்  "இறந்தவர்களில் பன்னிரெண்டு வீரர்கள் மற்றும் ஆறு ரயில்வே ஊழியர்கள் அந்த நிலையத்தில் இருந்ததாகவும்,  வெடிபொருட்களை சோதனையிட அங்கு  ஒரு நடை-வாசல் இருந்தது "என்றும் தெரிவித்தார். இருப்பினும், இந்த பாதுகாப்பு நடவடிக்கை இல்லாத நிலையத்திற்கு ஏராளமானநுழைவாயில்கள்  உள்ளன என்றும் தெரிவித்தார்.

பிரிவினைவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், ரயில் நிலையத்தில் ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. தடைசெய்யப்பட்ட BLA, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நீண்டகால கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

பிரிவினைவாதிகள் அடிக்கடி பாதிக்கப்படக்கூடிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் முஹம்மது பலோச் தெரிவித்தார்.

மாகாணத்தில் போலியோ தொழிலாளர்களை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வலுவான வெடிகுண்டு வெடித்துச் சிதறிய ஒரு வாரத்திற்குப் பிறகு சனிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது குறிப்பிடதக்கது . குறித்த குண்டுவெடிப்பில்  அருகில் இருந்த 5 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார். பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதில் பாதுகாப்புப் படையினர் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பல பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post