வாக்களிப்பது என்பது அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமை என்பதால் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
"வாக்களிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டமே உங்களுக்கு வழங்கிய உரிமை. எனவே அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்கள் கடமை. வாக்களிப்பது உங்கள் உரிமை. வாக்களிப்பது உங்கள் சக்தி... எனவே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை உங்கள் மதிப்புமிக்க வாக்கைப் பயன்படுத்த நவம்பர் 14 ஆம் தேதிவாக்குச் சாவடிகளுக்குச் செல்லுங்கள்." என ரத்நாயக்க கூறினார்.
