நேற்றைய தினம் (நவம்பர் 10) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அறுகம் வளைகுடாவின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்துஅதிக கவனம் செலுத்தினார்.
இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிரேஷ்ட உள்ளுர் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து பாதுகாப்புச் செயலாளருக்கு விளக்கமளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த தகவலின்படி பிரதேசத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தீவு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுவது முக்கியமானது என குறிப்பிட்டார்.
