கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (11) இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் பரமேஷ் சிவமணி, பி.டி.எம்., டி.எம். ஆகியோர் சந்தித்தனர்.
இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தலைமையகத்தில் அன்பான வரவேற்பைப் பெற்றார், அங்கு அவர் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் ஆர்வமுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
